Skip to news
திருச்சி 360நம்ம ஊரு அப்டேட்தEN
✏️ படம்: செய்தியின் அசல் படம், பென்சில் ஓவியமாக📷 அசல் படம்
← திருச்சி செய்திகள்

நிகழ்ச்சி · திருவானைக்காவல் · திருச்சி · நேற்று · இரவு 2:21

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

📰 மூலச் செய்தி: தினமணி ↗

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு கதிர் அலங்காரத்தில் புறப்பட்டார். இதையடுத்து 8.30 மணிக்கு கார்த்திகை கோபுரம் அருகே பனை ஓலைகளால் கட்டப்பட்ட சொக்கப்பனை தீ பந்தத்தால் கொளுத்தப்பட்டது.

தீ எரியத் தொடங்கியதும் பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் வழிபட்டனர். மேலும், திருவானைக்காவல் சம்புகேசுவரர் கோயிலில் கார்த்திகை கோபுரம், அம்மன் சந்நிதி, குபேரலிங்க சந்நிதி முன் சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டன.

சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

📋 முழு விவரம்

இடம்
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்
•
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
•
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் காலை 9 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 9.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். 10.30 மணி முதல் 12.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
•
மாலை 4.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து, 5 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். மாலை 6 மணிக்கு ஸ்ரீ உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நடைபெற்றது.
•
இரவு 8 மணிக்கு கதிர் அலங்காரத்தில் புறப்பட்டு, 8.30 மணிக்கு கார்த்திகை கோபுரம் அருகே பனை ஓலைகளால் கட்டப்பட்ட சொக்கப்பனையை சுற்றி வந்து, சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் எழுந்தருளினார். தீ பந்தத்தால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
•
பின்னர் தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு சென்றார். 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் வாசிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு திருக்கைத்தல சேவையுடன் மூலஸ்தானத்துக்கு சென்று சேர்ந்தார்.
•
திருவானைக்காவலில் செவ்வாய்க்கிழமை இரவு கார்த்திகை கோபுரம் முன் சொக்கப்பனை தீவைத்து கொளுத்தப்பட்டது. அம்மன் சந்நிதி முன், குபேரலிங்க சந்நிதி அருகே அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைகளும் கொளுத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
•
Sokkapanai lit at Srirangam and Thiruvanaikaval temples | Trichy news

▶ இந்தச் செய்தியைப் பார்க்க

WhatsApp-ல் பகிர்

மேலும் செய்திகள்