
குற்றம் · திருச்சி · திருச்சி · நவ. 24 · இரவு 4:38
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்: இருவர் கைது
📰 மூலச் செய்தி: தினமணி ↗திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பயணிகள் துளையிடும் கருவியில் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த சுங்கத் துறையினர், ரூ.87.64 லட்சம் மதிப்பிலான 698 கிராம் 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- திருச்சி
- •
- சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர். இரண்டு பயணிகள் துளையிடும் கருவியில் தங்கத்தை பசை வடிவில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 698 கிராம் 24 கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.87.64 லட்சம்.



