
← திருப்பூர் செய்திகள்
நிகழ்ச்சி · திருப்பூர் · திருப்பூர் · நேற்று · இரவு 2:24
சிவன்மலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் கோயில் முன்புள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ‘வெற்றிவேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டனர்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் காங்கயம் அருகே காடையூர் காடையீஸ்வரன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
📋 முழு விவரம்
- இடம்
- திருப்பூர்
- •
- கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கோயில் முன்புள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் ‘வெற்றிவேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
- •
- காங்கயம் அருகே காடையூர் காடையீஸ்வரன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பழையகோட்டை சாலை காசிவிஸ்வநாதர் கோயில், வட்டமலை முத்துக்குமார சுவாமி கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில், கொங்கணசித்தர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
- •
- Sivanmalai Murugan temple Karthigai Deepam lit | Kangayam news



