
மக்கள் பிரச்னை · நாமக்கல் · நாமக்கல் · இன்று · காலை 10:06
தொட்டிப்பாளையம் அங்கன்வாடியில் 9 மாதமாக மின்சாரம் இல்லை
📰 மூலச் செய்தி: தினமலர் ↗தொட்டிப்பாளையம் அங்கன்வாடியில் 9 மாதமாக மின்சாரம் இல்லை.
நாமக்கல் மாவட்டம், நருவலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தொட்டிப்பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மின் கம்பத்தில் இருந்து மையத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் 9 மாதங்களுக்கு முன் அறுந்து விழுந்தன. இதனால் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை.
மின்விசிறியும் இயங்குவதில்லை. மழைக்காலத்திலும், வெயில்காலத்திலும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றன.
அறுந்து விழுந்த ஒயர்கள் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டுள்ளன. இந்த ஒயர்கள் எந்த நேரத்திலும் அறுந்து குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது.
மையத்தின் சமையலறை பகுதியில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்துள்ளன. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மையத்திற்குள் புகும் அபாயமும் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் ஒயர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மின் இணைப்பை வழங்க வேண்டும்.
சமையலறை ஜன்னல்களுக்கு பாதுகாப்பு கம்பிகள் மற்றும் கதவுகளை பொருத்த வேண்டும்.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- நாமக்கல் மாவட்டம், நருவலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தொட்டிப்பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். மின் கம்பத்தில் இருந்து மையத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் 9 மாதங்களுக்கு முன் அறுந்து விழுந்தன. இதனால் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை, மின்விசிறியும் இயங்குவதில்லை. மழைக்காலத்திலும், வெயில்காலத்திலும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றன. அறுந்து விழுந்த ஒயர்கள் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டுள்ளன, இதனால் குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது. மையத்தின் சமையலறை பகுதியில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்துள்ளன, இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மையத்திற்குள் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் ஒயர்களை உடனடியாக அகற்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். சமையலறை ஜன்னல்களுக்கு பாதுகாப்பு கம்பிகள் மற்றும் கதவுகளை பொருத்த வேண்டும்.
