
நிகழ்ச்சி · இராசிபுரம் · நாமக்கல் · நவ. 18 · காலை 10:21
சாலை விரிவாக்கத்தில் இடிக்கப்பட்ட கோவில் படிக்கட்டுகள்: பக்தர்கள் சிரமம்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗ராசிபுரம் அருகே கோவில் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட முடியாமல் தவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே, கணவாய்மேடு பகுதியில் பழமை வாய்ந்த தணிகை பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ராசிபுரத்தில் இருந்து கொல்லிமலை செல்லும் பிரதான சாலையில் இந்தக் கோவில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடந்தது. இதற்காகக் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன.
சாலைப்பணி முடிந்த பின் புதிய படிக்கட்டுகள் அமைத்துத் தரப்படும் என ஒப்பந்ததாரர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். ஆனால், சாலைப்பணி முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.
இதனால் கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட வழியின்றி சிரமப்படுகின்றனர். பக்தர்களின் நலன் கருதி படிக்கட்டுகளை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📋 முழு விவரம்
- இடம்
- இராசிபுரம்
- •
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே, கணவாய்மேடு பகுதியில் பழமை வாய்ந்த தணிகை பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
- •
- ராசிபுரத்தில் இருந்து கொல்லிமலை செல்லும் பிரதான சாலையில் இக்கோவில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
- •
- சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கப் பணிக்காகக் கோவில் படிக்கட்டுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன.
- •
- சாலைப்பணி முடிந்த பின் புதிய படிக்கட்டுகள் அமைத்துத் தரப்படும் என ஒப்பந்ததாரர் கூறினார்.
- •
- ஆனால் சாலைப்பணி முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை படிக்கட்டுகள் அமைத்துத் தரப்படவில்லை.
- •
- இதனால் கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் வழிபட வழியின்றி சிரமப்படுகின்றனர்.
