
நிகழ்ச்சி · பரமத்தி வேலூர் · நாமக்கல் · அக். 28 · காலை 6:36
கிருத்திகை அபிஷேகம்: பரமத்தி வேலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
📰 மூலச் செய்தி: தினமலர் ↗பரமத்தி வேலூர் அருகே பல கோவில்களில் கிருத்திகை அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று பரமத்தி வேலூர் அருகே உள்ள ராஜா சுவாமி கோவிலில் ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம் பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
📋 முழு விவரம்
- இடம்
- பரமத்தி வேலூர், ப.வேலூர்
- •
- நேற்று கிருத்திகை அபிஷேகத்திற்காக பரமத்தி வேலூர் அருகே உள்ள ராஜா சுவாமி கோவிலில் ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- •
- இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம் பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.


