Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Events Gobichettipalayam Erode Today · 6:30 PM

Mahā Kumbhābhishekam of Ramanathaishwarar Temple Held Grandly at Vellankovil near Gobichettipalayam

Source: Maalaimalar ↗

Sri Parvathavarthini and Sri Ramanathaishwarar temple's Mahā Kumbhābhishekam was held today at Vellankovil near Gobichettipalayam.

The event began with the taking of the sacred Theertham. The Theertham and a sprouted coconut (Mulaippalgi) were brought from Sri Makaliammman temple.

Special rituals such as Ganapathi Homam, Yantra Sthapanam, Ashtapandana Marundu Saarthuthal and Yagasala poojas were performed. Yesterday, at Kamatchiyamman temple, a special Santi worship, Vimaan Koppur Kalasa sthapanam, and second and third kalam Yagasala poojas were conducted.

The ceremony was presided over by Koonambatti Thirumadam Nallavaku Naikar Sivashri Dr. C.

Nadaraj Swamigal, Chennai Malai Gurukal Palayam Sundaramurthi Swamigal Madalaaya Aadiyam, and Sivashri Arun Alalasundara Panditguru Swamigal. The poojas were led by Arulmalaiv Sivashri C.

Sivanantha Sivacharyar and Sivashri C. Balasubramanya Sivacharyar.

Arangavalar V. M.

Palanidhan, the temple's Sivanadiyar Thirukkootam and the people of Vellankovil town made excellent arrangements. A large number of devotees gathered and had darshan of the Swami.

Full details

Place
Gobichettipalayam
கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாதஈஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
புண்ணிய தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டன.
கணபதி ஹோமம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காமாட்சியம்மன் கோவிலில் விசேஷ சந்தி வழிபாடு, விமான கோபுர கலச ஸ்தாபனம், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
கூனம்பட்டி திருமடம் நல்வாக்கு நாயகர் சிவஸ்ரீ டாக்டர் ச. நடராஜ சுவாமிகள், சென்னிமலை குருக்கள்பாளையம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலய ஆதீனம், சிவஸ்ரீ அருண் ஆலாலசுந்தர பண்டிதகுரு சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அருள்மலை சிவஸ்ரீ ச. சிவானந்த சிவாச்சாரியார், சிவஸ்ரீ ச. பாலசுப்பிரமண்ய சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேக பூஜைகளை முன்னின்று நடத்தினர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் வி.எம். பழனிநாதன், ஆலய சிவனடியார் திருக்கூட்டம், வெள்ளாங்கோவில் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Vellankovil Ramanathaishwarar temple kumbabhishekam | Erode news

Watch this news on

Share on WhatsApp

More news