Skip to news
திருப்பூர் 360நம்ம ஊரு அப்டேட்தEN
✏️ படம்: செய்தியின் அசல் படம், பென்சில் ஓவியமாக📷 அசல் படம்
← திருப்பூர் செய்திகள்

குற்றம் · வெள்ளகோவில் · திருப்பூர் · நேற்று · காலை 6:15

வெள்ளக்கோவிலில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவர் மீது வழக்கு

📰 மூலச் செய்தி: தினமணி ↗

வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாராபுரம் வட்டம் வடகரையைச் சேர்ந்த 57 வயது முருகன் உப்பிலிபாளையம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். கடந்த 23ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் முருகன் பயணிகளுடன் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்துக்குப் பேருந்தை ஓட்டி வந்தார்.

வழியில் பேருந்து பழுதாகி நின்றது. பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பும் பணியில் முருகனும் நடத்துநரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி பெருமாபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவர், பழுதடைந்த பேருந்தை ஏன் இங்கு ஓட்டி வந்தாய் என்று கூறி முருகனுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் விஷ்ணுகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📋 முழு விவரம்

இடம்
வெள்ளகோவில், காங்கேயம்
•
வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகனைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
•
தாராபுரம் வட்டம் வடகரையைச் சேர்ந்த 57 வயது முருகன் உப்பிலிபாளையம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார்.
•
கடந்த 23ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பயணிகளுடன் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்துக்குப் பேருந்தை ஓட்டி வந்தபோது, வழியில் பேருந்து பழுதாகி நின்றது.
•
பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றும் பணியில் முருகனும் நடத்துநரும் ஈடுபட்டிருந்தனர்.
•
அப்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி பெருமாபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார், பழுதடைந்த பேருந்தை ஏன் இங்கு ஓட்டி வந்தாய் என்று கூறி முருகனுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
•
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் விஷ்ணுகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
•
Vellakoil bus driver attacked, case filed | Tirupur news

▶ இந்தச் செய்தியைப் பார்க்க

WhatsApp-ல் பகிர்

மேலும் செய்திகள்