Skip to news
சேலம் 360நம்ம ஊரு அப்டேட்தEN
✏️ படம்: செய்தியின் அசல் படம், பென்சில் ஓவியமாக📷 அசல் படம்
← சேலம் செய்திகள்

மழை / விவசாயம் · ஆத்தூர் · சேலம் · நேற்று · மாலை 4:47

ஆத்தூரில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம்

📰 மூலச் செய்தி: தினமணி ↗

ஆத்தூர் பேரூராட்சியில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது கட்டாயம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் ஏ கே கமால்தீன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மறைந்த 4ஆவது வார்டு உறுப்பினர் கெளஹாஜானுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சியின் வரவு-செலவு கணக்கும் சரிபார்க்கப்பட்டது.

கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத்துக்கு டிசம்பர் 10ஆம் தேதி திறப்பு விழா நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. நிர்வாக அதிகாரி மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

📋 முழு விவரம்

இடம்
ஆத்தூர்
•
ஆத்தூர் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
•
பேரூராட்சித் தலைவர் ஏ.கே.கமால்தீன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மறைந்த 4ஆவது வார்டு உறுப்பினர் கெளஹாஜானுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவு-செலவு கணக்கும் சரிபார்க்கப்பட்டது.
•
கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத்துக்கு டிசம்பர் 10ஆம் தேதி திறப்பு விழா நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

▶ இந்தச் செய்தியைப் பார்க்க

WhatsApp-ல் பகிர்

மேலும் செய்திகள்