
வணிகம் / விலை · நாமக்கல் · நாமக்கல் · நவ. 20 · காலை 9:10
குளிர் அதிகரிப்பால் நாமக்கல்லில் ராஜஸ்தான் போர்வைகள் விற்பனை மும்முரம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗நாமக்கல் மாவட்டத்தில் குளிர் அதிகரிப்பால் ராஜஸ்தான் போர்வைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
திருக்கார்த்திகைக்குப் பிறகு வழக்கமாக மழை குறைந்து குளிர் அதிகரிக்கும் நிலையில், தற்போது பொதுமக்கள் போர்வை மற்றும் கம்பளிகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வண்ணமயமான போர்வைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் பெரிய அளவிலான போர்வை ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுத்தர அளவிலான போர்வை ரூ.500-க்கும், சிறிய அளவிலான போர்வை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. திருக்கார்த்திகைக்குப் பிறகு வழக்கமாக குளிர் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் போர்வை மற்றும் கம்பளிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வண்ணமயமான போர்வைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
