
← நாமக்கல் செய்திகள்
குற்றம் · நாமக்கல் · நாமக்கல் · நவ. 12 · காலை 6:54
நாமக்கல் சமூகநீதி மாணவர் விடுதியில் காலி மதுப்புட்டிகள்: காப்பாளர் பணியிடம் நீக்கம்
📰 மூலச் செய்தி: தினமணி ↗நாமக்கல் லத்துவாடியில் உள்ள அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எல்.மதுபாலன் புதன்கிழமை அந்த விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் தங்கும் அறைகளைப் பார்வையிட்டபோது, போதைப் பொருள்கள் பயன்படுத்திய காலி பொட்டலங்களும், மது அருந்திய காலி புட்டிகளும் கண்டறியப்பட்டன.
விடுதி சமையல் கூடத்தில் அரிசி கையிருப்பு 70 கிலோ குறைவாக இருப்பதும் தெரியவந்தது. விடுதியின் காப்பாளர் சிவகுமாரிடம் விசாரணை நடத்திய ஆட்சியர், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்காணிக்கத் தவறியதால் அவரைப் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
📋 முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- •
- நாமக்கல் லத்துவாடியில் உள்ள அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ஆட்சியர் எல்.மதுபாலன் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் தங்கும் அறைகளில் போதைப் பொருள்கள் பயன்படுத்திய காலி பொட்டலங்களும், மது அருந்திய காலி புட்டிகளும் கண்டறியப்பட்டன. விடுதி சமையல் கூடத்தில் அரிசி கையிருப்பு 70 கிலோ குறைவாக இருந்தது. காப்பாளர் சிவகுமாரிடம் விசாரணை நடத்திய ஆட்சியர், போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்காணிக்கத் தவறியதால் அவரைப் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
