Skip to news
நாமக்கல் 360நம்ம ஊரு அப்டேட்தEN
✏️ படம்: செய்தியின் அசல் படம், பென்சில் ஓவியமாக📷 அசல் படம்
← நாமக்கல் செய்திகள்

அரசு அறிவிப்பு · நாமக்கல் · நாமக்கல் · நவ. 12 · காலை 6:54

வெப்படையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்

📰 மூலச் செய்தி: தினமலர் ↗

வெப்படையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் சப்-டிவிஷனுக்குட்பட்ட பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, மொளசி, கொக்கராயன்பேட்டை ஆகிய ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் மகளிர் தொடர்பான பிரச்னைகள் அல்லது புகார்கள் வந்தால், திருச்செங்கோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டும்.

அங்கு செல்வதால் அதிக நேரம், தொலைவு, காலதாமதம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கடைகோடியில் இருந்து வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மகளிர் தொடர்பான புகார்களும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. எனவே, பள்ளிப்பாளையம் சப்-டிவிஷனின் மையப்பகுதியான வெப்படையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📋 முழு விவரம்

இடம்
நாமக்கல்
•
பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பாளையம் சப்-டிவிஷனில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, மொளசி, கொக்கராயன்பேட்டை ஆகிய ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மகளிர் தொடர்பான புகார்கள் வந்தால் திருச்செங்கோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிக நேரம், தொலைவு, காலதாமதம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மகளிர் தொடர்பான புகார்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
•
சப்-டிவிஷனின் மையப்பகுதியான வெப்படையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
•
Demand for women's police station in Veppadai | Namakkal news

▶ இந்தச் செய்தியைப் பார்க்க

WhatsApp-ல் பகிர்

மேலும் செய்திகள்