
மழை / விவசாயம் · கொல்லிமலை · நாமக்கல் · நவ. 5 · காலை 10:45
கொல்லிமலை புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை
📰 மூலச் செய்தி: தினமணி ↗கொல்லிமலை புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் இந்தப் புளியஞ்சோலை ஆறு அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது.
மேலும் கொல்லிமலைப் பகுதிகளில் ஆங்காங்கே திடீர் அருவிகளும் உருவாகியுள்ளன. வழக்கமாக விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலை ஆற்றில் குளிப்பது வழக்கம்.
தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலை ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📋 முழு விவரம்
- இடம்
- கொல்லிமலை
- •
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் நாமக்கல் - திருச்சி எல்லைப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. தொடர் மழையால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி புளியஞ்சோலை ஆற்றுப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.



