
மழை / விவசாயம் · சேந்தமங்கலம் · நாமக்கல் · நவ. 3 · காலை 10:34
கொல்லிமலை அடிவாரத்தில் நிரம்பி வழியும் தடுப்பணைகள்: காரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி
📰 மூலச் செய்தி: தினகரன் ↗கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 1 வாரமாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்தத் தண்ணீர் நீர்வழி ஓடைகள் வழியாக அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பகுதி ஆறுகளுக்கு வருகிறது.
காரவள்ளியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் அனைத்தும் தற்போது முழுமையாக நிரம்பி வழிகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
காரவள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து பாக்கு மரங்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டது.
தற்போது பெய்த மழையினால் அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
📋 முழு விவரம்
- இடம்
- சேந்தமங்கலம்
- •
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அடிவாரம் காரவள்ளிப் பகுதிக்கு வருவதால், அங்குள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் 500-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இப்பகுதியில் பிரதான தொழிலான பாக்கு விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

