
Civic · Karur · Karur · Today · 1:34 AM
Potholed road under Sukkaliyur roundabout flyover causes distress to motorists; repair demanded
📰 Source: Dinamalar ↗(This story is in Tamil only)
கரூர் அருகே சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் சாலைகள் பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன.
வாகனங்கள் தடையின்றி செல்ல அங்கு ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் சாலை பல மாதங்களாக சேதமடைந்து குழிகளாக மாறியுள்ளது.
அங்கு எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரை பகுதியில் இருந்து திருச்சி செல்பவர்களும் கரூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து எச்சரிக்கை பலகைகளை வைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
📋 Full details
- Place
- Karur
- •
- கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. வாகனப் போக்குவரத்திற்காக அங்கு ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- •
- திருச்சியில் இருந்து சேலம் மார்க்கமாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மதுரையில் இருந்து திருச்சி செல்பவர்கள் மற்றும் கரூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, சுக்காலியூர் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து, எச்சரிக்கை பலகைகளை வைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



