
அரசு அறிவிப்பு · ஈரோடு · ஈரோடு · இன்று · காலை 7:11
நகரைச் சுற்றி 4 கி.மீ. தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா
📰 மூலச் செய்தி: தினமணி ↗ஈரோடு நகரைச் சுற்றி இலவச வீட்டுமனைப் பட்டா தடை 4 கிலோமீட்டர் தூரமாகக் குறைக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களைச் சுற்றி 16 கிலோமீட்டர் தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை 4 கிலோமீட்டர் தூரமாகக் குறைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வருவாய்த் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன், எம் விஜய் பாலாஜி ஆகியோர் 250 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மல்லிகை அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 804 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டன.
📋 முழு விவரம்
- இடம்
- ஈரோடு
- •
- நகர்ப்புறங்களைச் சுற்றி 16 கிலோமீட்டர் தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கத் தடை இருந்தது. அந்தத் தடையை 4 கிலோமீட்டர் தூரமாகக் குறைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 250 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


