Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Business & Prices · Erode · Erode · Yesterday · 8:33 AM

Erode Abdul Ghani Commercial Complex traders shut shops demanding rent cut

📰 Source: Dinamalar ↗

Erode Abdul Ghani Commercial Complex traders staged a shop closure protest.

Yesterday shops were closed from 9 a.m. to 1:30 p.m.

The traders demanded a rent reduction. The complex was built under the Smart City project at a cost of Rs 51.59 crore.

It has 346 shops spread over three floors. Because of high rent and low business, only 190 shops are currently operating.

The municipal corporation sent a notice that a 5 percent additional charge will be payable when the lease is renewed. Following this, the traders filed a petition with the municipal commissioner.

As negotiations did not reach an agreement, they held a sit‑in. Later, the mayor’s husband Subramaniam and district secretary Manokaran conducted talks.

They assured that if vacant shops are not auctioned within three months, the rent will be reduced and the matter will be taken to the state government. Action will also be taken to remove encroached shops and to cancel two months’ rent.

After this, the traders ended the sit‑in.

📋 Full details

Place
Erode
•
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அப்துல் கனி ஜவுளி மார்க்கெட் வணிக வளாக வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். வாடகையைக் குறைக்க வலியுறுத்திய இப்போராட்டத்தில், கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மூடப்பட்டிருந்தன. பின்னர் கடைகள் திறக்கப்பட்டன.
•
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 51.59 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த வளாகத்தில், மூன்று தளங்களில் 346 கடைகள் உள்ளன. அதிக வாடகை, வியாபாரமின்மையால் பல வியாபாரிகள் கடைகளைக் காலி செய்துவிட்டனர்; தற்போது 190 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக வாடகைக் குறைப்புக்காகப் போராடி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
•
ஒப்பந்தம் புதுப்பிக்கும் காலம் வந்ததால், 5 சதவீதம் கூடுதல் ஒப்பந்தக் கட்டணம் செலுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் வாடகை குறைவாக இருப்பதால், இங்கும் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் கோருகின்றனர்.
•
மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வியாபாரிகள் அலுவலக வளாகத்தில் தர்ணா நடத்தினர். பின்னர் மேயரின் கணவர் சுப்ரமணியம், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மனோகரன் ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காலி கடைகள் மூன்று மாதங்களில் ஏலம் போகாவிட்டால், அனைத்துக் கடைகளுக்கும் வாடகை குறைப்பது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், இரண்டு மாத வாடகை ரத்து குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தர்ணாவைக் கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
•
Erode shop shutdown over rent cut | Erode news

▶ Watch this news on

Share on WhatsApp

More news