
Crime · Coimbatore · Coimbatore · Today · 4:33 AM
Over 430 bailable warrants pending in Coimbatore city
📰 Source: Dinamani ↗(This story is in Tamil only)
கோவை மாநகரில் 430-க்கும் மேற்பட்டோர் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வடக்குப் பிரிவில் 260-க்கும் மேற்பட்டோர், தெற்குப் பிரிவில் 150-க்கும் மேற்பட்டோர் மீது பிடிவாரண்ட் உள்ளது.
இரண்டு தனிப் படைகள் அமைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுமார் 110 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள சுமார் 300 பேரைப் பிடிக்க போலீஸார் உறவினர்கள் வீடுகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடி வருகின்றனர்.
ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருப்பவர்களின் குடும்பத்தினரிடம் பிடியாணை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தலைமறைவாக உள்ளவர்கள் மீது பிஎன்எஸ் 269-ஆவது பிரிவின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
சமீபத்தில் சுமார் 10 பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாநகர காவல் துறை உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
📋 Full details
- Place
- Coimbatore
- •
- கோவை மாநகரில் நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள பிடிவாரண்ட் குற்றவாளிகள் மீது போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாநகர வடக்குப் பிரிவில் 260-க்கும் மேற்பட்டோர், தெற்குப் பிரிவில் 150-க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 430-க்கும் மேற்பட்டோர் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. இவர்களைப் பிடிக்க இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுமார் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள சுமார் 300 பேரைப் பிடிக்க அவர்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலீஸார் தேடி வருகின்றனர். ஓராண்டுக்கும் மேலாக பிடிபடாமல் தலைமறைவாக இருப்பவர்களின் குடும்பத்தினரிடம் பிடியாணை வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தலைமறைவாக உள்ளவர்கள் மீது பிஎன்எஸ் 269-ஆவது பிரிவின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன்படி, மாநகரில் சமீபத்தில் சுமார் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மாநகர காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.



