
Rain & Farming · Coimbatore · Coimbatore · 24 Nov · 10:11 AM
Bird flu alert: 24-hour monitoring at 12 checkpoints on Kerala border in Coimbatore district
📰 Source: Hindu Tamil ↗(This story is in Tamil only)
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியதால் கோவையில் கண்காணிப்பு தீவிரம்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் 24 மணி நேரக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைகட்டி, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரபகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு ஆகிய சோதனைச்சாவடிகளிலும் சிறப்புக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சித்ரா தேவி கூறுகையில், கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கால்நடைத் தீவனம் கொண்டு செல்லும் வாகனங்களும் முழுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன.
கிருமிநாசினி தெளித்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களின் வருகை, புறப்படும் இடம், செல்லும் இடம் ஆகிய விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
கோழிப் பண்ணைகளுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
📋 Full details
- Place
- Coimbatore
- •
- கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது.
- •
- வாளையாறு உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை சிறப்புக் குழுவினர் 24 மணி நேரம் கண்காணிக்கின்றனர். சரக்கு வாகனங்கள், கால்நடைத் தீவனம் கொண்டு செல்லும் வாகனங்கள் முழுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன. கிருமிநாசினி தெளித்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.



