
நிகழ்ச்சி · கோயம்புத்தூர் · கோவை · நவ. 24 · இரவு 12:16
கோவையில் ஸ்ரீ சத்யசாய்பாபா 101வது பிறந்த நாள் விழா: நாம சங்கீர்த்தனத்துடன் கொண்டாட்டம்
📰 மூலச் செய்தி: தினமலர் ↗கோவையில் பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் 101வது பிறந்த நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.
ரேஸ்கோர்ஸ் மேற்குகிளப் சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மந்திரில் காலை 5 மணி 15 நிமிடத்துக்கு ஓம்கார சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலையில் நகரசங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், உலக நலனுக்காக ஸ்ரீ சத்யசாய் வேள்வி ஆகியவை நடைபெற்றன.
மரக்கன்று வினியோகம் மற்றும் வஸ்த்திரதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு வேதமந்திர பாராயணம், இளைஞர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சி, சாய் நாமசங்கீர்த்தனம் நடைபெற்றன.
கேக் வெட்டும் நிகழ்ச்சியும், மங்கள ஹாரத்தி மற்றும் சுவாமி திவ்யதரிசனமும் நடந்தது. இரவு 7 மணிக்கு பிரசாத வினியோகம் நடைபெற்றது.
இந்த ஏற்பாடுகளை ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு செய்திருந்தன.
📋 முழு விவரம்
- இடம்
- கோயம்புத்தூர்
- •
- பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் 101வது பிறந்த நாள் விழா கோவையில் வேள்வி, சத்சங்கம், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது.


